டந்த செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப்ப ணியில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஈடுபட்டிருந்தார். கீரனூர்-திருச்சி பிரதான சாலையில் செல்லும்போது, ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு வாகனம் செல்வதைப் பார்த்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் தகவல் கொடுத்து, அந்த வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அந்த வாகனத்தை நிறுத்திய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், கீரனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

kk

சரக்கு வாகனத்தில் காய்கறி மூட்டைகள் கிடப்பதைப் பார்த்த கீரனூர் போலீசாரிடம், "நாங்கள் தூத்துக்குடிக்கு காய்கறி ஏற்றிச் செல்கிறோம்'' எனக்கூறி, தூத்துக்குடி முகவரியும் கொடுத்துள்ளனர். "சரி, காலையில் வந்து வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று போலீசார் சொல்ல, "சரி சார். நாங்க எங்கேயாவது தங்கிட்டு காலைல வந்து வாகனத்தை எடுத்துக்கறோம்'' எனக்கூறியதும், அந்த இரு நபர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றவர்கள் வராததால் காய்கறி வாகனத்தில் சில காய்கறி மூட்டைகளை இறக்கிவிட்டு சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முக்கால் பகுதிக்கு முழுமையாக தகரம் அடித்து மறைத்திருந்த வாகனத்தில், காய்கறி மூட்டை களுக்கு கீழே உள்ள மூட்டைகளில் கஞ்சா பண்டல்களைக் கண்டுபிடித்துள்ள னர். சுமார் 410 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது! எஸ்.பி. சந்தேகப்பட்டு பிடிக்கச் சொன்ன வாகனத்தில் இவ்வளவு கஞ்சா மூட்டைகளா? கடத்தி வந்தவர் களை வெளியே அனுப்பிவிட் டோமே! என்று பதறியபடியே கஞ்சா மூட்டைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத் துள்ளனர். போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிச் சென்றவர்கள் கொடுத்த செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கீரனூர் டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர்.

Advertisment

இத்தகவல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் கடுப்பான எஸ்.பி., உடனே வாகனத்தையும், கஞ்சா மூட்டைகளையும் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி சொன்னார். எஸ்.பி. உத்தரவின் பேரில் கஞ்சா மூட்டைகள் புதுக்கோட்டை கொண்டுவரப்பட்ட நிலையில், எஸ்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தப்பிச் சென்றவர்களைப் பிடிப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டி, காவல் நிலையம் வரை கொண்டுவரப்பட்ட கஞ்சா கடத்தல்காரர்களை, இன்று போய் நாளை வா என வழியனுப்பிவைத்த புதுக்கோட்டை போலீசார் குறித்துதான் நகரெங்கும் டாக்! எப்படி அவர்களைப் பிடிக்கப் போகிறார்களோ!

__________________________

மோட்டார் சைக்கிள் திருடனையும் கோட்டைவிட்டனர்!

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் பகுதியில் ஒரு நபர், கள்ளச்சாவியைப் பயன்படுத்தி ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும் சி.சி.டிவி.யின் துல்லியமான கேமரா பதிவுகள் கிடைத்துள்ளது. பல நாட்களாக புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த படத்தை வைத்துக் கொண்டு பைக் திருடனை தேடி வந்தனர். ஆனால் அதற்குள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ஒரு படத்தை வைத்துக்கொண்டு ஆலங்குடி சப்-டிவிசன் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கண்ணனையும், அவனது கூட்டாளிகளையும் கைது செய்து, கீரமங்கலம், கொத்த மங்கலம் உட்பட பல கிராமங்களில் விற்பனை செய்த 45 பைக்கு களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை போலீசாரிடம் இருந்ததும் இதே கண்ணன் படம்தான் என்பது ஷாக்கிங் நியூஸ்! இதே கண்ணனிடம்தான் கடந்த வருடம் 80 திருட்டு பைக்குகளை புதுக்கோட்டை போலீசார் மீட்டனர். அதற்குள் அந்த நபரை மறந்துவிட்டதால் சாக்கோட்டை போலீசார் சுதாரித்துக் கொண்டு தூக்கிச் சென்றுவிட்டனர். இதெல்லாம் பெருமையா?!

செருப்பைக் காட்டி மிரட்டல்!

கடந்த வாரம் ஆலங்குடி சப்- டிவிசன் வடகாடு காவல் நிலைய எல்லை யில் உள்ள வானக்கண்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் அனுமதி பெறாத பாரில், மது விற்பனை செய்ததை டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்தனர். மது விற்பனை செய்த பரிமளத்தை விசாரணைக்காக பைக்கில் ஏற்றும்போது அங்கு வந்த பார் ஓனரான தி.மு.க பிரமுகர் மதியழகன், பரிமளத்தை விடுவிக்கக்கோரி போலீசா ரிடம் செருப்பைக் கழற்றிக் காண்பித்து வாக்குவாதம் செய்த சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் பிறகும்கூட மதியழகன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய போலீசார், மறுநாளில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தபோதிலும், அவரை கைது செய்ய முன்வரவில்லை. அவர் ஏற்கெனவே 2 முறை போலீசாரிடம் தகராறு செய்த வீடியோ காட்சிகள் இருந்தும்கூட போலீசார் நடவடிக்கை எடுக்காதது தான் வேதனை!

-செம்பருத்தி